Tuesday, April 21, 2026
No menu items!

உயிரிழப்பு

இலங்கையில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் – 2025-2026 வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், “வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025–2026)” என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தரவுகளின்படி,...

இந்தோனேசியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜோ நகரத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்ததால், பள்ளியில் இருந்த மாணவர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதுடன், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விபத்து நேரத்தில், பள்ளிக்கட்டடத்தில் ஆண் மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடருகின்ற நிலையில், தற்போது...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 13 யானைகள் சிகிச்சையில் – வனஜீவராசிகள் திணைக்களம் தகவல்!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 13 யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பாத்திய' என்றழைக்கப்படும் யானை உயிரிழந்ததை அடுத்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, அனுராதபுரத்தில் 7 யானைகளும், பொலன்னறுவையில்...

முதல் மூன்று மாதங்களில் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த வருடத்தில் முதல் மூன்று மாதங்களில் 592 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைப்பதற்காக, கொழும்பில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 3 மாதங்களில் இடம்பெற்ற 565...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!  

காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். கஹகட்டகஸ்திகிலிய , தம்பகொல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டு யானை தாக்கியதில் இந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திவுல்வெவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.   <!-- -->

துப்பாக்கி பிரயோகத்தால் மூவர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான 02 பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளது; IGP!

பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுடன் இணைந்து, தினசரி வீதி விபத்துக்களைக் குறைத்துள்ள "தூய்மையான இலங்கை" வேலைத்திட்டத்தின் வெற்றியை எடுத்துரைத்தார். இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 9 இல் இருந்து 2 ஆகக் குறைந்துள்ளது, சில நாட்களில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். வீதி ஒழுக்கத்தை...

மூன்றாம் தவணைப் பரீட்சைக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு!

புத்தளம், கற்பிட்டி - பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெறும் மூன்றாம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயின்ற மபாஸ் முஹம்மது மஷாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என...

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு..!

ஹெட்டிபொல - வெடியேகெதர பிரதேசத்தில் வயல்வௌியில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹல்மில்லவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சடலம் நீதவான் விசாரணைகளுக்கு பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில்...

எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் பலி!

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி - லாகி எரிமலை நேற்று (03) வெடித்துள்ளது. அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img