ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சுமார் 5 இலட்சம் ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களுக்கும் பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு தலிபானியர்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய போது, அமெரிக்காவினால் முன்னைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ஆயுதங்கள் தலிபானியர்களால் பொறுப்பேற்கப்பட்டன.

அவற்றில் பெரும்பாலானவை தற்போது அல்கைடா போன்ற அமைப்புகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here