உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டை அச்சிடும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
இதற்கான விபரங்கள் நேற்றைய தினம் முதல் மாவட்ட செயலகங்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இன்று அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் , சமன் ஸ்ரீ ரத்னாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








