அத்தனகலு ஓயா ஆற்றில் மூழ்கி காணாமல்போன இளைஞர் சனிக்கிழமை (26.10.2024) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே காணாமல் போயுள்ளார்.

இந்த இளைஞர் தனது சக பணியாளர்களுடன் இணைந்து அத்தனகலு ஓயாவில் நீராடிக்கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் சுமார் 4 மணி நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here