மாத்தளை, கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹயாய பகுதியில் 02 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலேவெல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மாத்தளை, வஹகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 53 வயதுடையவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here