முதுகு தசைப் பிடிப்பு காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இருந்து விலகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இங்கிலாந்துடனான தொடரிலிருந்து விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடனான வெள்ளைப்பந்து கிரிக்கெட் (ஒருநாள், ரி20) தொடரில் விளையாடவிருக்கிறது.

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்திய மண்ணில் 05 ரி20, 03 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை இலக்குவைத்து பும்ரா இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக பி.சி.சி.ஐ. கவனம் செலுத்தி வருகிறது. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பெப்ரவரி 19ஆம் திகதி தொடங்குகிறது.

30 வயதாகும் பும்ரா ஆஸி. அணியுடனான தொடரில் 150 ஓவர்களுக்கும் அதிகமாக பந்து வீசியுள்ளார். வேலைப்பழு அதிகமானதாலேயே அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதென வர்ணனையாளர்கள் கூறினார்கள்.

பும்ராவின் காயம் எப்படி இருக்கிறதென இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பும்ராவின் காயத்தின் தன்மையை கண்டறிந்த பிறகுதான் அவர் இங்கிலாந்துடனான தொடரில் பங்கேற்பது உறுதி செய்யப்படும். பெப்ரவரி 12ஆம் திகதி கடைசி ஒருநாள் போட்டியிலாவது பும்ரா விளையாடுவாரா என அவரது உடல்நிலை பரிசோதனைக்குப் பிறகே தெரியவருமென பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here