இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்ட நிலையில், தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளர்.

அண்மையில் நடந்து முடிந்த T20 உலகக் கிண்ண தொடரில் ஜூன் 27ஆம் திகதி கயானாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் இறுதியாக விளையாடியிருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எனக்கு 37 வயதாகிறது, இந்த மாதம் இடம்பெறவுள்ள அஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு தான் தெரிவு செய்யப்படவில்லை” என்று மொயின் அலி கூறியுள்ளார்.

“நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன், இது அடுத்த தலைமுறைக்கான நேரம், இது சரியானது நேரம் என்று உணர்ந்துள்ளேன்.

2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமாகியது முதல் எனது பங்களிப்பை நான் வழங்கியுள்ளேன் என்று நினைக்கின்றேன்” என்றார்.

மொயின் அனைத்து வடிவங்களிலும் அணிக்காக தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் இதுவரை 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்துக்காக மூன்று வடிவங்களிலும் 6678 ஓட்டஙகளை பெற்றுள்ளதுடன், எட்டு சதங்கள், 28 அரைசதம் மற்றும் 366 விக்கெட்டுகளுடன் அவர் தனது சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்துள்ளார்.

“நான் மிகவும் பெருமைப்படுகிறேன், நீங்கள் முதலில் இங்கிலாந்துக்காக விளையாடும்போது, ​​​​நீங்கள் எத்தனை போட்டிகளில் விளையாடப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்றும் மொயின் அலி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here