‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி விவாதத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் கலந்துக்கொள்ளவில்லை.

‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே கலந்துக்கொண்டுள்ளார்.

குறித்த விவாவத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் அனைவரும் ஆரம்பத்தில் விவாதத்தின் முதல் கட்டத்தில் பங்கேற்க உறுதியளித்தனர். ஆனால், நிகழ்ச்சி தொடங்கும் போது அவர்கள் வரவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here