நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 09 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களில் 08 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 119 கிராம் ஹெரோயின், 262 கிராம் ஐஸ், 179 கிலோ கஞ்சா முதலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here