இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப்பத்திரங்களுடன் அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று (03) இலங்கையர்களை அல்பேனிய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அல்பேனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போலி ஆவணங்களுடன் எல்லையை கடக்க முயன்ற மூன்று இலங்கையர்களும் கோர்சாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இத்தாலியை நோக்கிச் சென்றதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கஃபே தானே எல்லையைக் கடக்க முயன்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 57, 51 மற்றும் 36 வயதுடைய இலங்கையர்கள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here