இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 189 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து போட்டியைச் சமன் செய்தது.

இதனையடுத்து சுப்பர் ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், டெல்லி கெப்பிடல்ஸ் அணி 13 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here