இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று இரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் கடந்த தொடர்களில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட கே.எல்.ராகுல் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காகவும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ரிஷப் பண்ட் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








