இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
250 மில்லியன் டொலருக்கான கையூட்டல் திட்டத்தை அவர் முன்னெடுத்ததாகவும், அமெரிக்காவில் நிதி திரட்டும் போர்வையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நியூயோர்க்கில் நேற்று (20) இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அதானி நிறுவனத்திலிருந்து பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த நிறுவனத்தின் மோசடிகள் தொடர்பில் 2022ஆம் ஆண்டிலிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.








