இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் இருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பயணித்த படகில் எந்தவொரு மீனோ அல்லது கடற்றொழில் உபகரணங்களோ காணப்படாத நிலையில் இரு காண்களில் 55 லீற்றர் எரிபொருளும் மட்டுமே காணப்பட்டுள்ளது.

மேற்படி இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here