இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் (19) மட்டும் 2,652 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் உயர் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் கடந்த 19 நாட்களில் மாத்திரம் 20,666 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை டெங்கு காரணமாக 53 மரணங்கள் பதிவாகியுள்ளன. மரண விகிதம் 0.07% ஆக பதிவாகியுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here