இலங்கையை பிரதிநிதிப்படுத்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு போட்டியாளர்கள் இன்று (01.08) நாடு திரும்பவுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூப்பந்து வீரர் வீரேன் நெட்டசிங்க, நீச்சல் வீரர் கைல் அபேசிங்க ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறி இன்று இலங்கைக்கு வரவுள்ளனர்.

பூப்பந்தாட்ட போட்டி வீரரான வீரேன் நெட்டசிங்க ஸ்பெயின் வீரருடன் மோதி தோல்வியடைந்துள்ளார்.

இதேவேளை, நடைபெற்று முடிந்த 100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் ஆரம்ப சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட கைல் அபேசிங்க போட்டியில் 8ஆவது இடத்தை பெற்று முதல் சுற்றுடனேயே வெளியேறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here