நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பெய்துவரும் பலத்த மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லி மீற்றர் இயலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








