இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இறுதி கட்ட கணக்கெடுப்பு மாவட்ட செயலாளரும் தொகை மதிப்பு ஆணையாளருமான சரத் சந்திரவினால் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்வானது வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, பட்டானிச்சூர், புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பட்டகாட்டு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் தி. திரேஷ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் ,பிரதாபன், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் அ.யூட் நேசராஜா, வவுனியா பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர் ந.திலீபன் மற்றும் தொகை மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











