கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற 2 ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (15) ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய்க் கப்பல் [Volkoneft 212] இரண்டாகப் பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 1 ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாவது டேங்கர் கப்பலும் [Volkoneft 239] புயலால் சேதம் அடைந்து அதே பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இழுவைப் படகுகள், உலங்கு வானூர்திகள் மற்றும் 50ற்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பாவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here