டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்களைப் பெற்று தங்களது இன்னிங்ஸை முடித்தது. அணியின் சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ஓட்டங்களுடன் சிறப்பாக விளையாடினார்.

இதனையடுத்து, முதலாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 248 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 270 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் Follow on முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 390 ஓட்டங்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால், இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 121 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதனை இந்திய அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 124 ஓட்டங்களை எடுத்துக்கொண்டு எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here