போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்து, பின்னர் இராணுவத்தால் மீட்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி, பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் உள்ள காவல்துறைத் தலைவரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பின்னர்,இந்தப் பொருட்கள் மதிப்பீட்டிற்காக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் வழியாக இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்படும்.

இந்த பொருட்களை அவற்றின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here