இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்க தயார் என இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது எனவும் எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை எனவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், உயர்மட்ட வருகைகள், உபகரண ஒத்துழைப்பு, பணியாளர்கள் பயிற்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் நமது இரு ஆயுதப் படைகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களும் ஒத்துழைப்பும் ஆழமடைந்து வருகின்றன.

மேலும் 8 பில்லியன் ரூபாவிற்கு அதிக பெறுமதியான பல்வேறு வகையான தொடர்பாடல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் அனைத்து தரத்திலான அதிகாரிகள் மற்றும் பல்வேறு வகையான துருப்புக்களுக்கு இடைவிடாத பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் PLA தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here