யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட காணொளியும் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில்
ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​ அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வைத்தியர் அர்ச்சுனாவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here