இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொடை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (20/1/2025) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தானை –  நாகொடைபகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர் கந்தானை – நாகொட பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.

இரு குழுக்களுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த  தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here