இலங்கையில் 2025 ஜனவரி 13 முதல் 21 வரை பதிவான பாதகமான காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 02 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 03 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது 228 குடும்பங்களைச் சேர்ந்த 686 பேர் 18 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்வினால் தத்திரிமலை பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

யான் ஓயாவின் நீர்மட்டம் உயர்வினால் ஹொரவ்பத்தனை பிரதேசத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் மனம்பிட்டிய பிரதேசத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here