கோவிலடி பகுதியில் விருந்து உபசாரத்தின்போது இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பலகாமம், கோவிலடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பேரிம்பராஜா (37) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதால் தனது பிள்ளையுடன் மனைவியின் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






