2024ஆம் ஆண்டில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கலின் ஊடாக ரூ.3.7 பில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளது என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட 13 சதவீத அதிகரிப்பாகும்.
திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்தமாக 17,010 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கையடக்கத் தொலைபேசிகள், தகவல் தொடர்பு உபகரணங்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தொழில்துறை மூலப்பொருட்கள் உள்ளிட்டவை அதிகமானவற்றாக இருந்தன.
மேலும், 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை கால்நடை தீவனத்திற்காக 300,000 மெற்றிக் தொன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய 2,222 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்நாட்டு தேவைக்காக 15,000 மெற்றிக் தொன் தோல் நீக்கப்பட்ட முந்திரி பருப்புகளும், 687 தேயிலை இறக்குமதி அனுமதிகளும் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








