இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும், திறந்த வர்த்தகம் மற்றும் பாதுகாப்பான கடல்வழிப் பாதைகளுக்கு முக்கியமான பிராந்தியமான இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன். நியாயமான மற்றும் சமநிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை பரந்த அளவில் உள்ளது என்றும், “துறைமுகங்கள் முதல் மக்கள் வரை”, அதாவது வணிகம் மற்றும் சமூக தொடர்புகள் இரண்டிலும் ஒத்துழைப்பு தேவை என்றும் தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here