பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது.

எதிர்காலத்தில் பெருமளவிலான பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here