இந்த ஆண்டில் கட்டாயமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டுடன் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அண்மையில் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி தேர்தலை கட்டாயம் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here