இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, பல ஆசிய நாடுகளில் கொவிட் 19 தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் கொவிட் 19 தொற்றுக்கான மருத்துவ மாதிரிகளைப் பரிசோதிக்கும் சுவாச கண்காணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

மேலும் தற்போதைய அவதானிப்புக்கமைய, கொவிட் 19 தொற்று பரவலில் அதிகரிப்பு இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here