குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று (24.06.) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில், இணையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்தையடுத்து வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில், சீனா, பிலிப்பைன்ஸ், மாலைத்தீவு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், 5000 ரூபாய் முதலீடு செய்தால் 3000 ரூபாய் இலாபம் கிடைக்கும் என்று கூறி அதிக அளவில் பணம் வசூலித்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரி கூறியுள்ளார்.

சுற்றிவளைக்கப்பட்ட இரண்டு வீடுகளிலும் இருந்து, பெருமளவிலான தொடர்பாடல் உபகரணங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர், ஏனைய நாடுகளுக்கும் இந்த மோசடி திட்டத்தை விரிவுப்படுத்தியிருக்களாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் மேலதிக விசாரணைகளை குற்றபுலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here