இலங்கையில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவருக்கு மேல் மன அழுத்தம் தொடர்பான சவால்கள் உள்ளன என சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் 19.4% பேர் இது தொடர்பாக சிக்கல்கள் அனுபவிக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில், ஆசிய சராசரியை விட இலங்கையில் மன அழுத்தத்தின் விகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் சராசரியாக 16.1% பேர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 முதல் 24 வயது வரையிலான இளம் இலங்கையர்களில் 39% பேர் மன அழுத்தத்தை அனுபவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இளம் தலைமுறையின் மனநலத்திற்கான உதவிகளை விரைவாக வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை காட்டுகிறது.

அதேபோன்று, இளைஞர்களுக்கான மனநல சேவைகளின் தரத்தையும், அணுகலையும் உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. இளம் வயதினரில் மன அழுத்தம் தொடர்பான சவால்கள் அதிகரித்து வருவது முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள். இதில் பெண்களில் 75% பேர் திருமணமானவர்கள் ஆகும். குடும்பத்திலிருந்து பிரிவினால், சில குழந்தைகளில் மன அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வு குறிப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here