தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களில் சிங்கள மொழியில் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படுவதால், தமிழ்மொழி மூல மாணவர்கள் இப்பயிற்சிகளிலிருந்து விலகும் நிலை உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மொழி தடைகள் காரணமாக வட மற்றும் கிழக்கு பகுதிகளில் பல இளைஞர்கள் தொழிற் பயிற்சிகளை பெற முடியாமல் உள்ளனர் என சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இந்த பிரச்சினையை அரசு கவனத்தில் எடுத்துள்ளதாக கூறியதுடன், அடுத்த ஆண்டிலிருந்து தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களில் தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here