இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4500 மெட்ரிக் தொன் உப்புத் தொகையை ஏற்றிய கப்பல் நாளை (27/1/2025) நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 30000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை அங்கீகரித்திருந்த நிலையில் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி, இந்தியாவில் இரண்டு விநியோகஸ்தர்களுக்கு இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், ஜனவரி 31ஆம் திகதிக்குள் 12,500 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here