க்ரிகோரியன் மரின் என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விமான நிலையத்தில் வைத்து தனது பயணப்பொதிகள் தொலைத்துள்ளார்.

ஒக்டோபர் 20, 2024 அன்று இலங்கையை வந்தடைந்த மரின், விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லையென பொலிஸ் பரிசோதகர் வசந்த குமாரவிடம் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காட்சிகள் மூலம் , பையை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து பதுளையைச் சேர்ந்த குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதுடன், அவர். 600,000 ரூ இழப்பீடு வழங்க நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் இந்த விரைவான நடவடிக்கைக்கு வீடியோ செய்தியில் மரின் புறப்படுவதற்கு முன் நன்றி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகளின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here