இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் சுமார் 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக டேங்கர் டிராக்கர்ஸ்(TankerTrackers) இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கடற்படை தடையால் சொந்த நாட்டு துறைமுகங்களுக்கு செல்ல முடியாது, பாதுகாப்பிற்காக இங்கு தங்கியுள்ளதாகவும், இவற்றில் 13 கப்பல்கள் ஈரானிய கொடியுடனும், ஏனையவை சடோ ஃபிளீட் “shadow fleet” எனப்படும் தடைகளை மீறும் கப்பல்களாகவும் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இக்கப்பல்களில் எரிபொருள் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் ஊடக பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ, இக்கப்பல்கள் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிக்கு வெளியே அவை இருப்பதால், அவற்றிற்கு இலங்கை எந்த பொறுப்பும் ஏற்காது என்றும், எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை மார்ச் மாதம் இலங்கை கடற்கரையில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஈரான் கப்பலை (IRIS Dena ) தாக்கி மூழ்கடித்த சம்பவமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச சட்டத்துக்கு அமைய நடுநிலை நாட்டின் 12 கடல் மைல் ஆள்பரப்பிற்குள் உள்ள கப்பல்களை அமெரிக்காவால் தாக்க முடியாது எனவும் குறித்த இணையத்தளம் _TankerTrackers_ குறிப்பிட்டுள்ளது.








