நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை குறைந்தது 734 ஆக அதிகரித்துள்ளது.

காணாமல் போனோரை மீட்கும் பணிகள் 5-வது நாளாக ஞாயிறு (ஒகஸ்ட் 30) நடைபெற்று வருகின்றன.

இதேபோல் திபெத்தின் Gyirong  கெய்ராங் பகுதியில் சீன அதிகாரிகள் 16 பேர் உயிரிழந்ததாகவும் 546 பேரை காணவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் இந்த பேரழிவில் மொத்தமாக 750 பேர் உயிரிழந்துள்ளனர், 3,000க்கும் மேற்பட்டோர்  காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் மீட்பு குழுக்கள் சேறு,  நீர்மட்டம் அதிகரித்துள்ள ஆறுகள் மற்றும் மேலும் வெள்ள அபாயத்திற்கு மத்தியில் தேடுதல் பணிகளை மேற்கொள்கின்றன. அடையாளம் தெரியாத சடலங்களின் டி.என்.ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அடையாளம் உறுதிசெய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here