சமூக வலைத்தளங்களில் “அவரச செய்தி” என்ற பெயரில் பால்மா, கொண்டன்ஸ்ட் மில்க் மற்றும் யோகட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக பரவும் செய்தி பொய்யானது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர வேண்டாம் என்றும், அதனால் சந்தையில் தவறான புரிதலும் நுகர்வோர் மத்தியில் அச்சமும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான விலை மாற்றங்கள் அல்லது முறைகேடுகள் இருப்பின் 1977 நுகர்வோர் ஹொட்லைன் இலக்கம் மூலம் தகவல் தெரிவிக்குமாறும் அதிகார சபை கேட்டுள்ளது.








