முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று திங்கள் (31) இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று அவரது பாராளுமன்ற வீதியில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தது. ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் செல்லாத நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ரவி கருணாநாயக்கவின் ஊடக குழு, அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த தினத்தில் ஆஜராக முடியாததால், அவரது சட்டத்தரணிகள் வேறு தினத்தை வழங்குமாறு கோரி இருந்ததாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் எந்த விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here