நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்குக்கு சில நாட்களுக்கு பிறகு, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஊடகங்களால் உறுதிப்படுத்திய காணொளியில் மீட்பு குழுவினர் சிறுமிக்கு தண்ணீர் மற்றும் முதலுதவி வழங்குவது காணப்படுகிறது. பின்னர் அவர் நிவாரண முகாமில் உணவு பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நேபாளம் அனர்த்தத்தில் 781 பேர் உயிரிழந்துள்ளதோடு  2,502 பேர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திபெத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 546 பேர் காணவில்லை

இதற்கமைய சுமார் 800 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன்  3,000க்கும் மேல் காணவில்லை எனவும் பாதிக்கப்பட்டோர் 90,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

புதன்கிழமை இமயமலை பகுதியில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள், வீதிகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் பெரும் சேதமடைந்தன.

தற்போது 10,000 நேபாள இராணுவ வீரர்களுடன் இந்தியா மற்றும் சீனாவின் நிபுணர் குழுக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அடையாளம் தெரியாத சடலங்களை இனங்காண டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன அவை உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here