நேபாளத்தில் கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஷாரா உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
மற்றைய இருவரும் பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் மேற்கு குற்றத் தடுப்புப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்








