Tuesday, July 28, 2026
No menu items!

இஷாரா செவ்வந்தி

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல பயன்படுத்திய படகு கைப்பற்றப்பட்டது!

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல பயன்படுத்தியதாகக் கூறப்படும் படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் மறைக்கப்பட்டிருந்த அந்தப் படகு இன்று (24) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைகளில், குறித்த படகு ஏ. ஆனந்தன் என்ற நபருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது....

இஷாரா செவ்வந்தி வழக்கில் புதிய தகவல்கள் – 7 பேர் கைது!!

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல முக்கிய விடயங்கள் வெளிச்சம் பெற்றுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர் தலைமறைவாக இருந்த காலப்பகுதியில் உதவி புரிந்தமை தொடர்பாக, கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி பகுதிகளைச்...

இஷாராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை!!!

இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிவந்துள்ள பல தகவல்களினடிப்படையில் பல்வேறு வகையான கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அவருக்கு வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகள் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 பேரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்ப்பு!!!

நேபாளத்தில் கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இஷாரா உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். மற்றைய இருவரும் பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் மேற்கு குற்றத் தடுப்புப் பிரிவிலும்...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் "மாத்தறை ஷான்" என்பவரின் நெருங்கிய சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் ஏனைய இருவர்,...

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரி இஷாரா செவ்வந்தி கைது விவகாரம்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார். நேபாளத்தின் பக்தபூர் மாவட்டம் திப்பஸ் பார்க் பகுதியில் உள்ள ஆடம்பர இல்லமொன்றில் பதுங்கியிருந்தபோது, நேபாள மற்றும் இலங்கை காவல்துறையினர் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர் வலைவீசப்பட்டார். இவருடன்...

செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர நாட்டை விட்டு தப்பியோட்டமா? – பொலிஸாரின் தகவல்!

கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை...

அநுராதபுரத்தில் இஷாரா செவ்வந்தி – வலைவீசி தேடிய பொலிஸார்..!

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, அநுராதபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 31 ஆம் திகதி குறித்த ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் அவரைப் போன்ற ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும்,...

இஷாரா செவ்வந்தி எங்கே? – தகவல் வழங்கினால் சன்மானம்..!

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ...

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பியோட்டமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு இந்நாட்டிலிருந்து திட்டமிட்ட, பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இஷாரா செவ்வந்திக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் முடக்கப்பட்டிருப்பினும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில்...
- Advertisement -spot_img

Latest News

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை...
- Advertisement -spot_img