கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிக்கு உதவிய மற்றும் பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் ஆவார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லாததால், குறித்த பெண்ணை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரொக்கப் பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி குறித்த சந்தேகநபர் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி எண்கள் :

கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் – 071-8591727

கொழும்பு குற்றப்பிரிவு OIC – 071-8591735

தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here