மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4 மணிக்கு முன்னறிவிப்பின்றி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது ஒரு சிரேஷ்ட ஹெஸ்பொல்லா அதிகாரியைக் கொல்லும் முயற்சி என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடிபாடுகளை அகற்றவும், உடல்களை மீட்கவும் அவசரகால பணியாளர்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், மீட்கப்பட்ட உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here