தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையைச் சேர்ந்த இலங்கையர்கள் இருவர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.

டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் இருவர் காயமடைந்தமை குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தூதுவர் ஹகாய் டிகான் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இஸ்ரேலிய அரசாங்கம் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையின் போது வெளிவரும் மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் தூதுவர் டிகான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here