ஈபிடிபியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வேட்பாளர்களை நேற்று(15.04)சந்தித்த கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறிப்பாக, வாய்ப்புக்கள் கிடைத்த போதெல்லாம் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு அதியுச்ச உழைப்பினை வெளிப்படுத்தியமையை சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்திலும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமாயின் தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களும் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது அவதூறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம், அவ்வாறான விடயங்களில் உண்மை இல்லை என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ள மகேஸ்வரி நிதியம் தொடர்பான கருத்துக்கள் பற்றி மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
(பழை நிருபர்-முரளிதரன்)








