ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, இஸ்ரேல் ஈரானுடன் தாக்குதலுக்கு தயாராவதை நிறுத்துமாறு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் இருக்கும் நேரத்தில், ஈரானை தாக்குவது பொருத்தமற்றது என்று ட்ரம்ப் நெதன்யாகுவிடம் கூறியுள்ளார்.
ஈரான் – அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆனால் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்று முன்னர் கூறியது, ஆனால் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்தமை குறிப்பிடத்தக்கது.








