ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிரந்தர மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, 5 குற்றவாளிகளுக்கு தலா 200 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், மேலும் 5 பேருக்கு தலா 220 ஆண்டுகளும், ஏனைய 4 நால்வருக்கு தலா 240 ஆண்டுகளும், மற்றுமொருவருக்கு 260 ஆண்டுகளும் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும் 15 குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அவர்களின் தண்டனை ஆரம்பமாகும் திகதியில் இருந்து பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.







