எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாது 24.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) கொட்டிகாவத்தையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் தந்தி பரிமாற்றங்கள் (TT) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சந்தேக நபர் ஆறு போலி நிறுவனங்களைப் பயன்படுத்தியதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருட்களை இறக்குமதி செய்வதாக தெரிவித்து பரிமாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, எனினும் எந்த பொருட்களும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை.
குறித்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேக நபர் கொட்டிகாவத்தையில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








